search
top

என்.சொக்கனுடன் சந்திப்பு – சென்னை புத்தக கண்காட்சி 2011

என்.சொக்கன் & சுகுமார்

இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்லும் ஆர்வத்தை விட முதல் முறையாக என்.சொக்கனை சந்திக்க போகும் ஆர்வமே மேலோங்கியது..இவரை சுமார் 2 வருஷமாக பிளான் பண்ணி ஒரு வழியாக சந்தித்து விட்டேன்…இதை எழுதும்போது தொலைக்காட்சியில் ‘எதையும் பிளான் பண்ணி செய்யனும். பிளான் பண்ணலேன்னா இப்படித்தான்’ வடிவேலு சொன்னது தற்செயலாகத்தான் இருக்கக் கூடும் :)

பேக் டூ சொக்கன்..நிறைவான சந்திப்பு..நேரம்தான் போதவில்லை..

அடடா என்ன இரண்டே பத்தியில் இந்த பதிவு முடிஞ்சுரும் போலயே…விட மாட்டேன்..ஆக்சுவலா அன்னைக்கு என்ன நடந்ததுன்னா…#பிளாஷ்பேக் ஸ்டார்ட்

ஆபீஸ்க்கு ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டு தெனாவட்டாக 5:45க்கு கிளம்பி 6:30க்கெல்லாம் போயிடலாம்னு பிளான் பண்ணா, விதி ட்ராபிக்கின் வடிவில் வந்து என்னை 7:00 மணிக்கு புத்தக கண்காட்சிக்கு கொண்டு போய் சேர்ந்தது :(

புத்தக கண்காட்சி வாசலில் 5 டிக்கெட் கவுண்டர்கள்..முதலில் கண்ணில் பட்ட 3 கவுண்டர்களிலும் “CLOSED” போர்டு பார்த்தவுடனே..அடடே அனுமதி இலவசம் போல என்று எனக்குள் எரிந்த பல்ப் அடுத்த 2 கவுண்டர்களில் டிக்கெட் கொடுப்பதை பார்த்தவுடன் ஆட்டோமெடிக்காக ஆஃப் ஆகியது.. :?

டிக்கெட் கவுண்டரில் சுமார் ஒரு பத்து பேரை தாண்டி ரூ.5/- நீட்டினால்..சாரி சார் டிக்கெட் தீர்ந்திடுச்சு..பக்கத்து கவுண்டர்ல வாங்கிக்கோங்க என்றார்..எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது :x என்று கடைசி கவுண்டருக்கு போய் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி ஒரு வழியாக கண்காட்சி அரங்கினுள் நுழைந்தேன்..

நுழைந்தவுடனே கண்ணில் பட்டது தினத்தந்தி ஸ்டால்தான்..அடுத்த நிமிடம் வரலாற்று சுவடுகள் என் கையில்..ஹலோ காசு கொடுத்துதான் :D

அடுத்து கிழக்கு பதிப்பகத்தை தேடி போகும்போது கண்ணில் பட்டது பேயோன் பதிப்பகம்..சே..மன்னிக்கவும் ஆழி பதிப்பகம்..ஆழி ஸ்டாலில் நுழைந்தவுடனே கண்ணில் பட்டது பேயோன் சாரின் திசை காட்டிப் பறவை..புத்தகத்தை எடுத்து பின்னட்டையை பார்த்தால் கோணலாக இருந்தது..அச்சு பிழையா இல்ல பேயோன் சார் வேணும்னே அப்படி பண்ணியிருக்காரான்னு ஒரு சில நொடிகள் புரியாமல் நின்றேன் :? நல்ல வேளை, அடுத்த புத்தகத்தில் அச்சு நேராக இருந்ததால் பேயோன் சாரிடம் பல்ப் வாங்காமல் தெளிந்தேன் :mrgreen:

பில் கவுண்டரில் எனக்கு முன்னால் 4 பேரும், பின்னால் 2 பேரும் அதே புத்தகத்தை வாங்கியிருந்தனர்..பில் கவுண்டரில் இருந்தவர் பேயோனாக அல்லது அவரது நண்பர் லார்டு லபக்தாஸாகவும் இருக்கலாம்..யார் கண்டது..பேயோன் சாரிடம் கேட்டால் இன்னொரு பல்ப் கொடுத்து அனுப்புவார்..நமக்கென் பல்பு சே வம்பு :P

இந்த புத்தகத்தை வாங்கியதன் மூலம் நான் பின் நவீனத்துவ வாசகன் ஆகிவிட்டேனா என்று பேயோன் சாரிடம் கேட்டேன்..வழக்கம் போல் பல்ப் கொடுத்து அனுப்பி விட்டார். சரி விடுங்க…கவுண்டரிடம் செந்தில் உதை வாங்குவது போல பேயோன் சாரிடம் பல்பை கேட்டு வாங்குவதில் அம்புட்டு ஜாலி :lol:

ஆனா..சொக்கன் கூறியது போல் ஆழி பதிப்பகம் பேயோன் சாருக்கு பேனர் வைக்க வேண்டும்.. அவரால்தானே ஆழிக்கு இம்புட்டு கூட்டம் :)

அங்கிருந்து நேராக கிழக்கு பதிப்பகம் வந்து சேர்ந்தேன்..சொக்கனார் கண்ணில் படாததால் கடைக்குள் நுழைந்தேன்..முதலில் வாங்கியது பா.ராவின் டாலர் தேசம். அடுத்து சொக்கனாரின் அம்பானி ட்ரைலாஜி வாங்கலாம்னு போனா திருபாய் அம்பானி புத்தகம் மட்டுமே இருந்தார்..ஏம்பா அவர் பசங்க முகேஷ் & அனிலை காணோமேன்னு விசாரித்தால் ஸ்டாக் தீர்ந்து விட்டது என்றனர். சரி, அடுத்து சொக்கனின் சார்லி சாப்ளின் இருக்கான்னா அதுவும் வித்துப் போச்சாம். பின்னர் சொக்கனிடம் இதை சொன்னபோது இதற்கு சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதான்னு தெரியலேன்னார் :) பின்னர் சொக்கனின் மகாத்மா காந்தி கொலை வழக்கு, எஸ்.முத்தைய்யாவின் சென்னை மறுகண்டுபிடிப்பு, ச.ந.கண்ணணின் ராஜ ராஜ சோழன் வாங்கினேன்.

ஆளைக் காணோமே என்று சொக்கனுக்கு போன் போட்டால் கிழக்கு ஸ்டாலில் மறு பக்கம் இருப்பதாக சொன்னார். உடனே சென்று சந்தித்தேன்..ரிஷியுடன் பேசிக் கொண்டிருந்த அவரை பார்த்ததும் முதலில் தோன்றியது மனிதர் எம்புட்டு பெரிய பொய் சொல்லியிருக்கிறார் என்பதுதான் :evil:

வேறு ஒண்ணுமில்லை, ரொம்ப நாளா அவர் எங்கள் குண்டர் சங்கத்தில் மெம்பர்..ஆனா மனிதர் சராசரி எடைத்தான்..மற்ற சங்க உறுப்பினர்களான டிபிசிடி, டாக்டர் விஜய் இவரை ஏற்கனவே சந்தித்திருந்தும் இவரை இன்னும் ஏன் சங்கத்தில் வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு சீரியஸான சந்தேகம் :roll: ஏதோ உள்குத்து இருக்கு..கவனிக்கனும்

நாங்கள்

  • சென்னையில் தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் சிரமங்கள்
  • கண்காட்சி அரங்கில் ஆங்காங்கே ஸ்ப்ரிங் பலகைகள் வைத்ததன் மூலம் ஜம்ப் அல்லது மண்ணை கவ் விளையாட்டு, 5 கவுண்டர்கள் வைத்து அதில் 2 கவுண்டர்களில் ஏதாவது ஒன்றில் மட்டும் randomஆக டிக்கெட் விற்பனை செய்வது மூலம் கண்ணாம்மூச்சு ரீமேக் ஆட்டம் போன்ற சுவாரசியமான விளையாட்டுக்களை அறிமுகப்படுத்திய பபாஸியின் வித்தியாசமான மார்கெட்டிங் உத்தி ;) (எப்படி இருந்தாலும் நாம டிக்கெட் வாங்கி உள்ளே வந்துருவோம்னு அவங்களுக்கு தெரியும் சார்ன்னு சொக்கன் & ரிஷி சரியாகச் சொன்னார்கள்!)
  • இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் கிழக்கு மற்றும் சொக்கனின் டாப் செல்லர்
  • சொக்கன் தற்போது எழுதி வரும் பத்திரிகை தொடர்கள்
  • சொக்கனின் டைம் மானேஜ்மெண்ட் (ஆபீஸ்க்கு போய் வேலை வேற பாக்குறாராம்..ஹும்..எப்படி நம்புறது சொல்லுங்க :roll: )

பற்றி பேசிக் கொண்டிருந்த போது சுகுமார் வந்தார். மனிதர் சொக்கனாரின் மகாத்மா காந்தி கொலை வழக்கு புத்தகத்திற்கு கவர் எல்லாம் போட்டு பயபக்தியோடு ஆட்டோகிராப் வாங்கினார். தான் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் வாங்கிய கையோடு கவர் போட்டுவிடுவேன் என கற்பூரம் கொளுத்தி சத்தியம் பண்ணாத குறையாக பணிவோடு சூளுரைத்தார்! எனக்கென்னவோ அப்போது சொக்கனார் பள்ளி வாத்தியாராகவும், சுகுமார் மாணவனாகவும் தெரிந்ததார்கள் :) நான் கூறுவதில் சந்தேகம் இருந்தால் இந்த பதிவின் முதலில் இருக்கும் படத்தை இன்னொரு தபா பார்க்கவும் :) சிறிது நேரத்தில் சுரேகா வந்தார்.

ksawme, ரிஷி, சொக்கன் & சுகுமார்

சிறிது நேரம் உரையாடிய பின் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு சுரேகா, ரிஷி,சுகுமார் விடைப் பெற்றுச் செல்ல, நானும் சொக்கனும் பேசிக் கொண்டே ஜூஸ் குடிக்க சென்றோம்..

பா.ராவின் favourite ஆன லிச்சி ஜூஸை சொக்கன் வாங்கி கொடுக்க குடித்து கொண்டே பேசினோம்.. நல்லாத்தான் இருந்தது.

பின்னர் சொக்கனிடம் அவர் புத்தகம் எழுத எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், எங்கிருந்தெல்லாம் தகவல்களை சேகரிக்கிறார், எடிட்டிங்கின் அவசியம் போன்ற பல சுவாரசியமான விஷயங்களை பேசினோம். சொக்கனின் ISAS (Information Search and Analysis Skills) கேட்க ரொம்பவே சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது..ஒரு புத்தகத்தின் பின் இருக்கும் அவர் உழைப்பு அசாத்தியமானது..அதைப் பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம். இவரையும் வேறு சிலரையும் பதிவிறக்க எழுத்தாளர்கள் என்று குற்றம் சாட்டுவது தேவையில்லாத ஒன்று..அப்படி சாத்தியங்கள் இருந்தால் நாளை நான் கூட எழுத ஆரம்பித்து விடலாம் :)

பேசிக்கொண்டே மீண்டும் கிழக்கு ஸ்டாலுக்கு வந்தோம். பா.ரா நின்றிருந்தார்..ஏற்கனவே நான் பல தடவை சொன்ன மாதிரி ஏனோ அவரை பார்க்கும் போதெல்லாம் என் ஸ்கூல் ப்ரின்ஸிபால் ஞாபகமும் பயமும் வருவது ஏனென்று தெரியவில்லை..சொக்கன் அறிமுகப்படுத்துகிறேன் என்றார். ஏனோ நடக்காமல் போனது..

மதுரையில் கிழக்கு புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று சொக்கனிடம் கேட்க அவர் என்னை நேராக ஹரன் பிரசன்னாவிடம் கொண்டு போய் நிறுத்தினார். பிரசன்னா காதில் ஹெட்போனுடன் செம ஸ்டைலாக இருந்தார். இதுவரை நான்தான் ஹெவி வெயிட் என்று மிதப்பு, பெருமையெல்லாம் அவரை பார்த்தவுடன் அழிந்து போனது.  backgroundல் ‘என் கர்வம் அழிந்ததடி’ என்ற பாட்டு கேட்டது நிஜமா பிரமையான்னு தெரியவில்லை :|  வெயிட்டை குறைங்க நண்பா..என்னையும் சேர்த்துதான் சொல்றேன் :(

சொக்கனிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு லக்கி யூத் சே லக்கி லுக் எதிரில் வந்தார்..சொக்கன் இவர்தான் @ksawme என்று அறிமுகப்படுத்தியதும் என்னை ஏற இறங்க பார்த்தவர், பார்த்தா ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கீங்கன்னு வாரினார்.  இது போதாதுன்னு add onஆக ட்விட்டர்ல ஆக்டிவா இருக்கீங்களே, பிளாக் ஏதாவது எழுதுறீங்களான்னு கேட்டு மேலும் ஒரு வாரு வாரினார் :| சே அவர் வலைப்பதிவுல எத்தனை பின்னூட்டத்தில் http://ksaw.me போட்டுருப்பேன்..மனிதர் கவனிக்கவே இல்லையே :roll:

அவரிடம் சொக்கன் என்னங்க..சூப்பர் பிளாக் வைச்சிருக்கார்..தெரியலேங்குறீங்களே என்றார்..ஏனோ எனக்கு உத்தமபுத்திரன் விவேக்கின் ஙே முழி ஞாபகத்துக்கு வந்தது.

பின்னர் சொக்கன் புத்தகங்கள் வாங்கச் செல்ல. நான் சும்மா சுத்திக் கொண்டிருக்கும்போது அதிஷாவை இழுத்து வந்தார் லக்கி. இவர்தாம்யா ksawme – active twitterer and blogger என்று தன் பங்குக்கு எடுத்து கொடுக்க..அதிஷா அது ஏன் ksawmeன்னு பெயர் வைச்சிருக்கீங்க? (இதை நீங்க பொறந்ததில் இருந்தே இப்படித்தானா என்ற பாணியில் படிக்கவும்) என்று கேட்டு அவர் பங்குக்கு என்னை வார ஆரம்பித்தார்.. நான் பதில் சொல்வதற்குள் அவர்கள் வேறு டாபிக்குக்கு சென்று விட்டதால் ஒரு மிக பெரிய வரலாற்று உண்மை அங்கேயே புதைந்து போனது ;) பின்னர் அடிக்கடி போனில் டச்சில் இருக்குமாறு அதிஷா கட்டளை இட்டார்..அவர்கள் எஸ்ஸாக எத்தனிக்க நான் அடம்பிடித்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னரே விட்டேன் (பின்ன வரலாறு முக்கியமுல்ல :D  )

அதிஷா, லக்கி & ksawme

புத்தகம் வாங்கப் போன சொக்கன் திரும்ப வந்து சேர்ந்தார்..சில நிமிடங்கள் பேசி விட்டு அவரின் ’மகாத்மா காந்தி கொலை வழக்கு’ புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்கினேன்..டின்னர் போலாமே என்றேன்..இல்ல பரவாயில்ல என்றார்..’There goes your cup mate’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அடுத்த தடவை சென்னை வரும்போது சாவகாசமா பேசலாம் என்று சொல்லி விடைப்பெற்றேன் :)

சொக்கனின் ஆட்டோகிராப்!

சொக்கனின் ஆட்டோகிராப்!

சொக்கனிடம் செலவழித்த நேரங்கள் மிகக் குறைவே..காலமும் நேரமும் கூடி வந்தால் அடுத்த தடவை சாவகாசமாக உரையாட வேண்டும்..பார்ப்போம்..

பின் குறிப்பு

இந்த சந்திப்பில் எடுத்த full resolution photos with face & geo tagகோடு பார்க்க, தரவிறக்கி கொள்ள இங்கே கிளிக்கவும்..

சென்னை புத்தக கண்காட்சி 2011ல் வாங்கிய புத்தகங்கள்

#புத்தகம்எழுதியவர்பதிப்பகம்
1மகாத்மா காந்தி கொலை வழக்குஎன்.சொக்கன்கிழக்கு பதிப்பகம்
2டாலர் தேசம்பா.ராகவன்கிழக்கு பதிப்பகம்
3ராஜ ராஜ சோழன்ச.ந.கண்ணன்கிழக்கு பதிப்பகம்
4திசை காட்டிப் பறவைபேயோன்ஆழி பதிப்பகம்
5சென்னை மறுகண்டுபிடிப்புஎஸ்.முத்தையாகிழக்கு பதிப்பகம்
6வரலாற்று சுவடுகள்தினத்தந்திதினத்தந்தி
7முகேஷ் அம்பானிஎன்.சொக்கன்கிழக்கு பதிப்பகம்
8அனில் அம்பானிஎன்.சொக்கன்கிழக்கு பதிப்பகம்
9பொன்னியின் செல்வன்கல்கிமெய்யப்பன் பதிப்பகம்
10நோக்கியாஎன்.சொக்கன்கிழக்கு பதிப்பகம்

Related posts:

  1. ஏ.ஆர்.ரஹ்மான் – என்.சொக்கன் – ஒரு வாசகனின் பார்வை

Facebook comments:

12 Responses to “என்.சொக்கனுடன் சந்திப்பு – சென்னை புத்தக கண்காட்சி 2011”

  1. VickyTamil VickyTamil says:

    @ksawme 6 paragraphகளில் (மட்டும்) ஸ்மைலி miss ஆகியிருக்குது. ஏதாவது பிரச்சனையா என்று உடனடியாக கவனிக்கவும் :)
    via Twitoaster

    • ksawme ksawme says:

      @vickytamil :) ஆமாங்க..ரொம்ப ’சே’ & ஸ்மைலி போட்டுட்டேன்னு நாந்தான் விட்டு வைச்சேன் :)
      via Twitoaster

  2. sukumarswamin sukumarswamin says:

    @ksawme ஹா..ஹா… நைஸ் .. நன்றி பாஸு.. @nchokkan
    via Twitoaster

  3. nchokkan nchokkan says:

    @ksawme :> நபநகேஸாமி :>>
    via Twitoaster

  4. Murali says:

    Looks like you have met a good number of celebrity twitters :-)

    • சுவாசிகா says:

      Murali,

      Yeah thats true. But apart from Chokkan, I spent only couple of minutes with others :)

      Regards,
      ksawme

  5. ராஜூ says:

    அதென்னங்க ரெண்டாவது ஃபோட்டோல பின்னாடி வைரமுத்து நிக்கிறாப்ல..?

    • சுவாசிகா says:

      அட ஆமாம்ல..

      நல்ல அப்சர்வேஷன்..நன்றி ராஜூ :)

      அன்புடன்,
      சுவாசிகா

  6. ஆயில்யன் says:

    :)

    ஆறு பாராக்களில் ஸ்மைலியும் முக்கியமான # சில இடங்களில் ”சே” வும் மிஸ்ஸிங்க்! அதான் கிட்டதட்ட ஒருவாரம் எடுத்துக்கிட்டு ரீலிசு செய்யற பதிவுல ஏன் இப்பிடி :) ))

    • சுவாசிகா says:

      ஆயில்யன் தம்பி,
      ரொம்ப :) & சே யூஸ் பண்ணிட்டேனோன்ற குற்ற உணர்ச்சியில அந்த 6 பாராக்களில் இருந்து எடுத்து விட்டேன்..

      அதுவே இப்ப பெரிய சாமி குத்தமா போயிடுச்சே :|

      அன்புடன்,
      சுவாசிகா

Leave a Reply

top

Switch to our mobile site