search
top

இணையம் (internet)

இன்று ஒரு தகவல் பகுதியை இணையம் பற்றிய சுவாரசியமான குறிப்புகளோடு ஆரம்பிப்போம்!

இணைய தந்தை

J.C.R.Licklider

ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) இணைய தந்தையாக அறியப்படுகிறார்.

முதல் மின்னஞ்சல் (email)

ரேமண்ட் எஸ். டாம்லின்சன்

ரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson) தான் முதல் மின்னஞ்சலை அனுப்பியவர்.

அதுவரை ஒரே கணிணியில் இருந்துதான் இரு நபர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. 1971ல் இவர் அனுப்பிய மின்னஞ்சலில்தான் ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்பட்டது.

மின்னஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும் ‘@’ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியவரும் இவரே.

முதல் மின்னஞ்சலை பற்றி அவர் எழுதிய குறிப்பைக் காண இங்கே சொடுக்கவும்

முதல் இணையத்தளம்

Tim Berners-Lee

டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners-Lee) என்பவரால் ஆகஸ்ட் 6,1990ல் தொடங்கப்பட்ட http://info.cern.ch/தான் முதல் இணையத்தளமாகும்.

‘World Wide Web’ அறிமுகப்படுத்தியவரும் இவரே.

முதல் இணைய வழங்கி(web server)

முதல் இணைய வழங்கி

இடப்புறத்தில் காணப்படும் NeXT என்ற கணிணிதான் முதல் இணைய வழங்கியாகும்(web server)

முதல் இணையத்தள முகவரி
முதல் இணையத்தள முகவரி

மார்ச் 15, 1985 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட www.Symbolics.com தான் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் இணையத்தள முகவரியாகும்.

பதிவு செய்யப்பட்ட முதல் 100 இணையத்தள முகவரிகளைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

முதல் இணையத்தள உலாவி(Web Browser)
மார்க் ஆண்டர்சன் & எரிக் பினா

ஏப்ரல் 22, 1993ல் வெளியடப்பட்ட NCSA Mosaic தான் முதல் இணையத்தள உலாவியாகும்.

இதை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மார்க் ஆண்டர்சன்(Marc Andreessen) மற்றும் எரிக் பினா(Eric Bina).

முதல் தேடுபொறி(search engine)

முதல் தேடுபொறிஏப்ரல் 20,1994ல் தொடங்கப்பட்ட www.webcrawler.com தான் இணையத்தின் முதல் தேடுபொறியாகும்(search engine).

யாஹீவும் (Yahoo), கூகுளும்(Google) இதற்கு பின்னால் வந்தவையே.

முதல் வலைப்பதிவர்

ஜஸ்டின் ஹால் (Justin Hall) தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாளராக அறியப்படுகிறார்.

சனவரி 1994ல் தொடங்கப்பட்ட இவரின்  http://www.links.net/ தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாகும்.

அவரின் முதல் வலைப்பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்

முதல் யூடியுப் காணொளி (Youtube Video)

யூடியுப்பின்(You tube) முதல் காணொளி(video) ”Me at the zoo”. வலையேற்றியவர் அதன் நிறுவனர்களின் ஒருவரான ஜாவித் கரீமின் (Jawed Karim) .

ஏப்ரல் 23, 2005 அன்று வலையேற்றப்பட்ட இக்காணொளியை இதுவரை 3,912,015 தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.

முதல் டிவிட் (Tweet)

Jack Dorsey

ட்விட்டரின் முதல் ட்விட்டை எழுதியவர் அதன் நிறுவனர்களின் ஒருவரான ஜாக் டார்சி (Jack Dorsey).

மார்ச் 23, 2006 அன்று அவர் போட்ட முதல் ட்விட் ‘just setting up my twttr’.

முதல் ட்விட்டை காண இங்கே சொடுக்கவும்

No related posts.

Facebook comments:

5 Responses to “இணையம் (internet)”

  1. [...] This post was mentioned on Twitter by Swami K, Swami K. Swami K said: இணையம் (internet) | சுவாசிகா – இன்று ஒரு தகவல் http://j.mp/g2FHzH [...]

  2. Drongo says:

    நல்ல ட்ரிவியா! பக்கத்திலேயே லிங்க்குகளும் இருப்பது ரொம்ப வசதியா இருக்கு. சில புதிய விஷயங்கள் தெரிந்துகொள்ளமுடிந்தது.

    rock on, சகோதரரே!

    • சுவாசிகா says:

      நன்றி சகோதரி!

      உனது மறுமொழி எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது..தொடர்ந்து பல சுவாரசியமான தகவல்களை வரும் பதிவுகளில் தொடருகிறேன்..

      அப்புறம்..பப்ளிக் எக்ஸாமுக்கு தயாராகியாச்சா?!

      அன்புடன்,
      சுவாசிகா

  3. Drongo says:

    அச்சச்சோ! என்னதிது, நீங்க தப்புத்தப்பான கேள்விகளெல்லாம் கேக்கறீங்க?!

    நீங்க ஆள் மாத்தி கேட்டுட்டீங்கன்னு நெனைக்கறேன்.. ;)

    • சுவாசிகா says:

      அது சரி :)

      exam fever கேள்விபட்டிருக்கேன்..அதுக்காக இப்படியா!

      அன்புடன்,
      சுவாசிகா

Leave a Reply

top

Switch to our mobile site