புதிய பகுதிகள்
இந்த வலைப்பதிவை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு..ஆரம்பிச்சப்ப இருந்த வேகம் போகப் போகப் பணி சுமையால் பதிவு போடறதுல இடைவெளி வந்து, பின்பு தாமதமாகி… கடைசியில் 2-3 மாசத்துக்கு பதிவே போட முடியாத அளவிற்கு மோசமாகிப் போச்சு
இப்படியே போனா அப்புறம் நம்மளை சுத்தமா மறந்துருவாங்கன்னு தீடீர்னு ஒரு பயம் அல்லது ஞானோதயம் வந்தது
சரி எதை பத்தி எழுதலாம்னு கடந்த ஒரு மாசமா யோசிச்சு யோசிச்சு கடைசியா 6 ஏரியா ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.. அவை
1. வலையை வென்றவர்கள்
இந்த பகுதியில் வலையுலகில் வெற்றிப் பெற்றவர்களைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றை பதிவு செய்கிறேன். இதில் முதலில் நாம் பார்க்கப் போவது
- FireFox
- Hotmail
- Blogger
- Flickr
- You tube
2 .இன்று ஒரு தகவல்
இது வெகு நாட்கள் முன்பு ட்விட்டரில் மொக்கை சே ட்விட் செய்ய நேரம் இருந்து என்ன எழுதலாம் என்று தெரியாமல் இருந்த காலத்தில்
முயற்சித்தது.. தென்கச்சி கோ.சாமிநாதன் சார்தான் எனக்கு இதற்கு இன்ஸ்பிரேஷன்.. என்ன ஓண்ணு..அவர் திறமைக்கு அவர் ‘இன்று ஒரு தகவல்’ வானொலியில் வழங்கி பேமஸ் ஆனார்.. நான் ஏதோ என்னால முடிந்த அளவு இங்கே எழுதி முயற்சி பண்ணி பாக்கிறேன். #அடடா என்னா ஒரு தன்னடக்கம்
3. படித்ததில் பிடித்தது
எனக்கு பிடித்த வலைப்பதிவுகள், செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது.
4. ஒளியும் ஒலியும்
எனக்கு பிடித்த காணொளிகளை(videos) உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது.
5. உதவித்துளிகள் (டிப்ஸ்) – வலைப்பதிவு , ட்விட்டர்
ஏதோ ஒரு 2 வருஷம் ட்விட்டர்லேயும், வலைப்பதிவுலேயும் இருந்ததால் நமக்கு தெரிந்த சில டிப்ஸ்களை உங்களிடம் சொல்லலாமே என்ற (விபரீத) எண்ணம்…நான் அப்படி ஒண்ணும் சாதிக்கலைன்னாலும்..அட இருங்க..அதனால என்ன..கிரிக்கெட் கோச் மாட்சை இப்படி இப்படி ஆடி ஜெயிங்கன்னுதான் சொல்ல முடியும், அதுக்காக அவரே ஆடி ஜெயிக்கனும்னு ஏதாவது சட்டம் இருக்குதா என்ன?!
#அடடா என்னம்மா சமாளிக்கிறே சாமி..கீப் இட் அப்
6. திருக்குறள்
இதுவும் வெகு நாட்கள் முன்பு ட்விட்டரில் ட்விட் செய்ய நேரம் இருந்து என்ன எழுதலாம் என்று தெரியாமல் இருந்த காலத்தில்
முயற்சித்தது.. ட்விட்ர்ல போட விஷயமே இல்லேன்னு சும்மா 2 நாள் பிள்ளையார் சுழி போடற மாதிரி திருக்குறள் போட.. நம்ம சொக்கன் அட தினமும் ஒரு குறளா! நடத்துங்க.. ஆல் தி பெஸ்ட்னு முன்மொழிய..போக போக டாக்டர் விஜய் இதையேன் பிளாக்ல போடக்கூடாது என்று வழிமொழிய (அதாவது உசுப்பேத்த
) இதோ ஆரம்பிச்சுட்டேன் கொடுமையை சே கடமையை!
இனி எழுத வேண்டியதுதான்..
என்ன ஒண்ணு, ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு. ஃபினிஷிங் நல்லா பண்ணுவேன்னு ஒரு நம்பிக்கை..
மறக்காம அடிக்கடி வந்து படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க..
அப்பப்போ எழுதுறியா (இருக்கியா) இல்லையான்ற ரேஞ்சுக்கு உரிமையோடு தலையில் குட்டிய முரளி ஜெயராமன், உண்மை விரும்பி, தம்பி வெற்றிக்கு நன்றி!
விரைவில் சந்திப்போம்
டிஸ்கி
இதுவரை நான் கேட்ட, படித்த, புரிஞ்ச விஷயங்களை எனக்கு தெரிந்த பாணியில் இந்த புதிய பகுதிகளில் எழுதப் போறேன்..அதனால நான் சொல்ல வர்றது என்னன்னா..யாரும் என்கிட்ட வந்து நீ அவரை பாத்து காப்பி அடிச்சிட்ட, இவர் படைப்பை திருடிட்டே என்று எல்லாம் சண்டைக்கு வரப்படாது..சொல்லிப்புட்டேன்..வேணும்னா You might be inspired by thatன்னு சொல்லிக்கோங்க
No related posts.
Facebook comments:



முன்னோட்டத்துக்குதான் இந்த பில்டப்பா.. எப்போ எழுதுவீங்கன்னு சொல்லுங்க.
வாங்க செல்வா!
வரும் திங்களன்று ‘இன்று ஒரு தகவலில்’ இணையம் பற்றிய பதிவு வெளியாகும்
அன்புடன்,
சுவாசிகா