search
top

ராஜிவ் காந்தி இந்திரா காந்திக்கு எத்தனையாவது பையன்?

ராஜிவ் காந்தி - இந்திரா காந்தி

உடனே முதலாவது பையன்னு நீங்க கையைத் தூக்குவதற்கு முன் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்!

சுமார் இரண்டு வருஷத்திற்கு முன் ஒரு நண்பர்கள் சந்திப்பில் என் நண்பன் ஒருவனை பயங்கரமா ஓட்டிக் கொண்டிருந்தோம்..

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவன், இவ்வளவு பேசுறீங்களே, நான் தமிழில் ஒரு கேள்வி கேட்கிறேன், அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியமா என்றான்..

அடுத்த 2 வருடத்திற்கு அதன் பதில் தெரியாமல் பேய் முழி முழிக்க போகிறோம் என்பதை அறியாமல் அந்த கேள்வியை கேட்க (தெனாவெட்டாக) தயாரானோம் :(

அந்த கேள்விதான்

ராஜிவ் காந்தி இந்திரா காந்திக்கு எத்தனையாவது பையன்?

அந்த சந்திப்பிற்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக நண்பர்கள் எங்காவது சந்தித்தால் இந்த கேள்வியை பற்றி பேசாமல் இருந்ததில்லை..அந்த அளவிற்கு எங்களை :evil: அடித்த கேள்வி இது.

நாங்களும் எங்கள் பங்குக்கு

  • How manyth of the son is Rajiv Gandhi to Indira Gandhi?
  • How much of the son is Rajiv Gandhi to Indira Gandhi

என்று எங்களால் முடிந்த அளவிற்கு ஆங்கிலத்தை படு கொலை செய்து கொண்டிருந்தோம் :oops:

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை போல கேள்வி கேட்ட எங்கள் நண்பன் அடுத்தடுத்த சந்திப்புகளில் எங்களை பார்த்து “டேய் இன்னுமாடா நீங்க இதை கண்டுபிடிக்கல”ன்னு :twisted: வெறுப்பேற்றினான் :(

ஒரு வழியாக மூணு மாசத்துக்கு முன்னாடி டிவிட்டர்ல இந்த கேள்விக்கு ஒமச்சி அருணும் (@ommachi), விஜய் நாராயணணும் (@vkpedia) பதில் சொல்லி எனக்கு விடிவளித்தார்கள்..அவர்களின் விடை இங்கே

What is the birth order of Rajiv Gandhi to Indira Gandhi?

Of Indira Gandhi’s children, what is Rajiv Gandhi’s filial rank?

பதில் கிடைச்ச உடனே நண்பனுக்கு போன் போட்டு..டேய் எனக்கு பதில் தெரிஞ்சுருச்சு கேக்கிறியான்னு கேட்டா, வேணாம் வேணாம், நீ ட்விட்டர்ல அதை கேட்டதையும் அதுக்கு 2-3 பேர் பதில் போட்டதையும் நான் ஏற்கனவே பார்த்துட்டேன் என்று எனக்கு :idea: கொடுத்தான்..

சே..உழைப்பெல்லாம் வீணா போச்சேன்னு கடுப்பானாலும் ;) ரொம்ப நாளா மண்டையை குடைந்து கொண்டிருந்த இந்த கேள்விக்கு விடை கிடைத்தது ஒருவித நிம்மதியை கொடுத்தது :)

நன்றி அருண் & விஜய்!

பின்குறிப்பு

நானும் இப்பல்லாம் இந்த கேள்வியை எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கேன்..என்ன ஒண்ணு, அடிக்கடி பதில் மறந்து போயிடுது :(

ட்விட்டர்லேயும் சட்னு தேட முடியல..வரலாறு ரொம்ப முக்கியம்ல..அதான் இங்க போட்டுட்டேன் :)

No related posts.

Facebook comments:

11 Responses to “ராஜிவ் காந்தி இந்திரா காந்திக்கு எத்தனையாவது பையன்?”

  1. இந்திரா காந்தி இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்

    • சுவாசிகா says:

      சே..சூப்பர் கேள்வி டாக்டர்! இருங்க…முயற்சி பண்ணிட்டு திரும்ப வரேன் :)

    • Kangon says:

      What is the position of Rajiv Gandhi in the chronological order of Indian Prime Ministers? :D

      பாடசாலையில் 9ஆம் ஆண்டில் எங்களுக்கு ‘சந்திரிகா இலங்கையின் எத்தனையாவது ஜனாதிபதி’ என்பதை ஆங்கிலத்தில் கேட்குமாறு ஆங்கில ஆசிரியர் சொல்லி, வதைத்து பின்னர் சொல்லித்தந்த விடை…

      • சுவாசிகா says:

        அட! எனக்கு இந்த பதில் சரியாத்தான் படுது..

        நன்றி கங்கன் :)

        அன்புடன்,
        சுவாசிகா

  2. Drongo says:

    The French Prof @ my school insists it’s ‘manieth’.
    “Ungalukku French-ae theriyadhu!”-nu solli naanga avara bulb pannitom :)

    • சுவாசிகா says:

      பரவாயில்லையே…frenchல சுலபமா இருக்கு போல!

      ஆமா அது எப்படி எனக்கு french தெரியாதுன்னு சொல்லலாம்..எனக்கு french கொஞ்சம் கொஞ்சம் தெரியுமாக்கும் :)

      வருகைக்கு நன்றி சகோதரி!

      அன்புடன்,
      சுவாசிகா

      • Drongo says:

        அடடா, அந்த மனுஷன் ஃப்ரெஞ்ச்ல சொல்லியிருந்தா பரவாயில்லையே! அவர் , ‘manieth’ என்ற வார்த்தை ஆங்கிலத்துல ‘புது ட்ரெண்ட்’-னு டுபாக்கூர் விட்டார்..பல்ப் வாங்கினார்!

        உங்களுக்கு ஃப்ரெஞ்ச் தெரியும்…’அதிலென்ன சந்தேகம்?!’ ;)

        • சுவாசிகா says:

          அடடா! யாருக்கு ஃப்ரெஞ்ச் தெரியாதுன்னு நீ சொன்னது தெரியாம நானே வலிய வந்து பல்ப் வாங்கிட்டேன் போல!

          ஆமா சகோதரி, பாண்டிச்சேரில பள்ளி வாத்தியாருங்களை புரொபஸர்ன்னுதான் கூப்பிடுவீங்களா? #அதியசம் #சந்தேகம்

          அன்புடன்,
          சுவாசிகா

  3. Drongo says:

    அன்புள்ள அண்ணா,
    நாங்க அவங்கள உயர்திணைப் பெயர்கள்ல கூப்பிடுறதே அதிசயம். எங்களுக்கு சில சமயம் ஒரு சில ஆசிரியர்களோட நிஜப் பெயரே மறந்துபோயிருக்கு..இதுல ப்ரொஃபஸர் வேறயா? #onlybuildup
    :)

  4. T.S.BAKYA says:

    THAYAVU SEYTHU SOLLUNGAL

    • சுவாசிகா says:

      பாக்யா,

      மேலேயே விடை இருக்கிறதே..உங்களுக்கு எந்த கேள்விக்கு விடை வேண்டும்?

      அன்புடன்,
      சுவாசிகா

Leave a Reply

top

Switch to our mobile site