ட்விட்னவங்க சந்திப்பு – ஆகத்து 2010
முதற்கண் இந்த சந்திப்புக்கு விதைப்போட்ட நண்பர் @tbcdக்கு நன்றி..சென்னைக்கு வருவதாகவும் விருப்பமுள்ளவர்கள் சந்திக்கலாம் என்று அவர் அனுப்பிய ட்வீட்டை பார்த்தவுடனே இதை ட்விட்னவங்க சந்திப்பு சீசன் 2வாக
மாற்ற கோதாவில் இறங்கி ஆள் சேர்க்க ஆரம்பித்துவிட்டேன்..
எங்களின் அழைப்பை ஏற்று இந்த ட்விட்டப்பில் கலந்து கொண்டு இந்த சந்திப்பை மறக்க முடியாத ஒன்றாக ஆக்கிய நண்பர்கள் @TBCD, @isr_selva, @v4vetri,@iamkarki, @VickyTamil, @sprabha, @spinesurgeon, @vraa, @venkiraja, @nandhakumar, jmr_chn அனைவருக்கும் மிக்க நன்றி!
இது போன்ற சந்திப்புகள் மூலம் அறிந்து கொள்ளும் விஷயங்களும், அனுபவங்களும் பல. வேறு வேறு துறைகளிலும் இருக்கும் நண்பர்கள் கூறும் அனுபவங்களும், கருத்துகளும் மிகவும் சுவாரசியமானவை. மேலும் …Its good to see the faces behind those interesting, witty, awesome tweets
இந்த சந்திப்புக்கு நண்பர்களை கலந்து கொள்ள அன்புடன்
அழைத்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. இதை டைரக்டர் செல்வா பலமாக ஆமோதிப்பார் என்பதை ஆணித்தரமாக இந்த சபையோர் முன் கூறிக்
கொள்கிறேன்!
சென்ற ட்விட்னவங்க சந்திப்பில் என் மனதில் பதிந்ததை எழுதியிருந்தேன்..இந்த முறை சந்திப்பில் கலந்து கொண்டவர்களிடமிருந்து மேட்டரை அன்பாக கேட்டு
வாங்கி தொகுத்து இருக்கிறேன்.. எனது டார்ச்சரை பொறுத்துக் கொண்டு சந்திப்புக்கு வந்தது போலவே சகித்து கொண்டு தங்கள் அனுவங்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி!
இதற்கு மேலும் உங்களை மொக்கை போடாமல் இதோ இந்த சந்திப்பை பற்றி நம் நண்பர்கள்!
அண்ணன்(வேறு வழி..நாம யூத்ன்றத வேற எப்படி establish பண்றது
) @tbcd என்கிற அரவிந்தன்
சந்திப்பு என்றவுடனே ஆர்வமுடன் ஏற்பாடு செய்ய களத்தில் இறங்கிய அண்ணன் சாமிக்கு ஒரு பெரிய ஓ.
அது மட்டுமல்லாமல் என்னை வந்து கூட்டிச் செல்வதாகவும் தானே முன் வந்து சொன்னதற்கு மீண்டும் ஒரு ஓ.
விடுதியிலிருந்து போகும் வழியனைத்தும் துணை முதல்வர் வீடாகட்டும், அமைச்சர்கள் வீடாகட்டும், கமல் வீடாகட்டும், பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிக்காட்டியப்படியே கூட்டிச் சென்றமைக்கு மீண்டும் ஒரு ஓ.
வழமையாக மெரினாவிலே நடக்கும் சந்திப்புகளை இம்முறை பெசண்ட் நகரில் நடத்தலாம் என்று யாரோ ஒருவர் முன்மொழிய அதை சாமி பின்மொழிய, நானும் வழிமொழிந்தேன். நடக்கப் போகும் விபரீதம் அறியாமல் அதை டுவிட்டரிலும் போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தோம்.
சாமியின் வண்டிக்கு “பெருத்த” சோதனையை கொடுத்த வண்ணம் நாங்கள் கிளம்பிய நேரத்திலிருந்து, சாரை சாரையாக மக்கள் எங்கோ போய்க்கொண்டேயிருந்தனர். நானும் எங்க போறாங்க, எங்க போறாங்க என்று கேட்டுக்கொண்டே வந்தேன். சாமி சுவிசேச கூட்டங்களாக இருக்குமென்றார். அவர்கள் காவி உடைவேறு அணிந்திருந்தது குழப்பத்தை அதிகரித்தது. ஒருவழியாக ஒரு சிலரை நிறுத்திக் கேட்டால் பெசண்ட் நகர் தேவாலயத்தில் கொடியேற்றம் என்று ஒரு குண்டை எறிந்துவிட்டு நடக்க தொடங்கினார்கள்.
என்னடா இது இந்த டுவிட்டர்களுக்கு வந்த சோதனை என்று நொந்துக்கொண்டே பெசண்ட் நகர் கடற்கரையில் இருக்கும் ஒரே கட்டிடத்தின் எதிரே போய்ச் சேர்ந்தோம். சேர்ந்த நொடியிலிருந்து சுமார் 30 நிமிடம் வரை அலைப்பேசியிலே சென்னையின் மறுப்பக்கமிருந்து இந்தப்பக்கம் வருபவர் போல் ஏக அலப்பரையுடன் @jmr_chn வந்து சேர்ந்தார்.
இருக்கிமிடம் தெரியாமல் இருப்பவரான @vraa சாவா சோன் அருகே என்றுவுடன் வழிக்கேட்டு வந்து சேர்ந்தார்.
சிறிது நேரம் கழித்து ஒரு பாலகன் வந்து நீங்க என்று ஆரம்பித்தப் பொழுது, விளையாட மணலுக்குப் போ என்று சொல்ல நினைத்தால்..அவர் தான் @Sprabha .
சில நிமிடம் கழித்து, தோள்களில் மொத்த கல்லூரியின் வேதனை/சாதனைகளை சுமந்தப்படி தம்பிரி @venkiraja வந்து சேர்ந்தர். ஏகப்பட்ட கற்பனைகளோடு வந்திருந்த எங்களை நிழற்படக்கருவி எடுத்துவராமல் ஏமாற்றினார். சிறிது நேரம் கழித்து @v4vetri வந்தார்.
ஏதாவது பிரச்சனை என்றால் என் அலுவலகமிருக்கு என்று சொன்ன கார்க்கி வரவில்லையே என்று நினைக்கும் முன் @iamkarki வந்து சேர்ந்தார். ஏறத்தாழ ஒவ்வொருவராக வந்து சேர்ந்தப் பின்னும் மணலில் கால் வைக்க ஏனோ சாமிக்கு தயக்கம்.
தயக்கத்தின் பின்னனி…நம்ம அவர்..அவர் தாங்க.,..ஐ.எஸ்.ஆர் செல்வா. இயக்குனரான அவரையே இயக்கி (மிரட்டி) சந்திப்பிற்கு வரச் சொல்லியிருந்தார். அவரை மட்டும் காணவில்லை. சிறிது நேரத்தில் வானில் எலிக்காப்டர் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் பறந்துச் சென்றது. சாமி, இதில் அவர் வருவார் என்று நம்பிக்கையுடன் பார்க்க, இயக்குனர் சாலையோரமாக மெல்ல நடந்து வந்தார்.
குடிநீர் புட்டிகளை நானும் தம்பி வெங்கியும் வாங்கி வர, கூட்டம் மணலை நோக்கி நகர்ந்தது.
திரை வரலாற்றில் இடம்பெற்ற அந்த கட்டிடத்தின் பின்னே நாங்கள் அமர. வேக வேகமாக எங்கியிருந்தோ வந்தான் என்பதுப் போல் @vickytamil வந்து சேர்ந்தார். பின்னாலே @nandhakumar வந்து சேர்ந்தார். கொண்டு வந்த கோவை மைசூர்பாவை அனைவரும் கிள்ளிக்கொண்டு பேச தொடங்கினோம். தொடங்கிய அரைமணி நேரம் கழித்து சின்ன மரூ புருனோ வந்தார்.
என்ன பேசினோம் என்பதை வெள்ளித்திரையில் சாமி விவரிப்பார்
![]()
சந்திப்பு முடிந்தப் பின்னர், போரூர் சகோதர்கள் (சாமி, வெங்கி) இருவரும் கிளம்ப வழிவிட்டு, நானும் சின்ன மரு.புருனோவும் நானும் அந்த தெய்வீக கூட்டத்திற்குள் அலைப்பாய்ந்து ஒரு தானி பிடிக்க முயற்சித்து முடியாமல் நடையயைக் கட்டினோம். சுமார் 2 கீமி வியர்த்தப் பின் ஒரு தானி அமைந்து என் விடுதி நோக்கி கிளம்பினோம். தி நகர் வந்து சேர்ந்தப் பின்னர், பாண்டி பசார் சாலையில் மெதுவாக நடந்தப்படி அகில உலக பதிவர்கள்/டுவிட்டர்கள் அரசியலை அலசிவிட்டு, கேபிள் சங்கர் பரிந்துரைத்த (செய்தார் என்றே நினைவு) பெலித்தா நசிக்கண்டாரில் உணவு உட்கொண்டோம். அந்த சதே (தசை/சதை) என்ற பார்பக்கூ கோழிக்கறி என்னை மீண்டும் ஆட்கொண்டது. சின்ன மருவும் விரும்பி உண்டார். அதன் பின் விடுதியில் என்னை இறக்கிவிட்டு (நடையாகத் தான் ), சின்ன மரு. வீடு திரும்பினார்.
அழைப்பை ஏற்று, வந்திருந்து சந்திப்பை இனிமையாக்கிய அனைத்து டுவிட்டர் நண்பர்களுக்கு மீண்டும் என் நன்றிகள். இதுப் போல பல பல சந்திப்புகள் நடந்து பல பல கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ வேண்டுமென்பதே என் அவா !
பல நாள் கழித்து எழுத வாய்ப்பளித்து, மிரட்டி, நினைவுறுத்தி சாதித்த சாமிக்கு ஒரு சிறப்பு நன்றி !
நம்’அவர்’ ஐ.எஸ்.ஆர் செல்வா @isr_selva
யார் மிரட்டினாலும் நான் மதுரைக்கு வருவதை தடுக்க முடியாது என்று ஜெ கூப்பாடு போடுவது போல, யார் மிரட்டினாலும் நான் பெசன்ட் நகர் டிவிட்டர் சந்திப்புக்கு வரமாட்டேன் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் @ksawmeயின் அடுத்த மிரட்டல் SMSஐயும் பார்த்தபின், பெசன்ட் நகருக்கு புறப்பட்டுவிட்டேன்.
எனக்கிருந்த பயம் என் மோட்டர் பைக்கிற்கும் தொற்றிவிட்டதோ என்னமோ? புறப்படுகையில் மக்கர்
![]()
வடபழனி 100 அடி ரோடுக்குப் போனால் AC பஸ் கிடைக்கும் என்ற உபரி தகவலுக்காக ஆட்டோகாரர் 10 ரூபாயை அதிகப்படியாக பறித்துக் கொண்டு, என்னை இறக்கிவிட்டுச் சென்றார். நிறைய AC பஸ் வந்தது. ஆனால் ஒன்று கூட பெசன்ட் நகர் செல்லவில்லை. 30 நிமிடம் கழித்துதான் தெரிந்தது, பெசன்ட் நகருக்கே ஒரு பஸ் கூட போகவில்லை
![]()
வெறுத்துப்போய் ஒரு திருவான்மியுர் பஸ்ஸில் ஏறினால், கிண்டி வரை என்றார் கண்டக்டர் டிக்கெட்டை கிழித்துக் கொண்டே. கிண்டியில் கூட்டமாக பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், ஏதோ ஒரு பஸ் நம்பரைச் சொல்லி அது மட்டும்தான் அடையாறு போகும், காத்திருங்கள் என்றார். பக்கத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு பஞ்சாபி, இதுல ஏறு என்று ஏதோ ஒரு ஓடுகிற பஸ்ஸில் ஏற்றினார். என்ன ஆச்சரியம், அடையாற்றில் அந்த பஸ் என்னை இறக்கிவிட்டது.
அங்கிருந்து பெசன்ட் நகருக்கு ஆட்டோ கேட்டால் 100 ரூபாய் என்றார்கள், அல்லது பதறி விலகினார்கள். கடைசியாக ஒரு பிரைவேட் ஆட்டோக்காரர், 60 ரூபாய் தாங்க என்று என்னை கிட்டத்தட்ட கடத்தினார். வழியெல்லாம் கூட்டம். சே.. பதிவர் கூட்டத்துக்கு வேற இடமே கிடைக்கலையா என்று நொந்தபடி உற்றுப்பார்த்தால் அது கூட்டமல்ல ஊர்வலம் என்று தெரிந்தது.
சார் இன்னைக்கு கொடி நாள். அதான் எல்லாரும் பெசன்ட் நகர் சர்ச்சுக்கு ஊர்வலமா போறாங்க என்றார். அடையார் முதல் பெசன்ட் நகர் வரை ஊர்வலமா? நமக்கு வழி கிடைக்குமா என்று சிந்தித்த போதே, ஒரு போலீஸ்கார் லெப்டுல திரும்பு என்றார். சிறிது தூரத்தில் அடுத்த போலீஸ்காரர் ரைட்டுல திரும்பு என்றார். இப்படியே சில பல இடது வலது திருப்பங்களுக்குப் பின் இனி ஆட்டோ போகக்கூடாது என்று ஒரு போலீஸ் டீமே என்னை மடக்கியது.
தூரத்தில் சர்ச் தெரிந்ததால், ஆட்டோவில் இருந்து இறங்கி, நானும் ஊர்வலத்தில் ஒருவனாக பீச் நோக்கி நடந்தேன். நம்ம பதிவர்களை இந்தக் கூட்டத்தில் எங்கே பார்ப்பது? மொபைலை உயிர்ப்பித்ததும் @ksawme இந்தக் கேள்வி கேட்பீங்கன்னு தெரியும். நேரா வாங்க, ஒரு பெரிய லைட்டு கம்பம் இருக்கும் அதுக்கு கீழ நிக்கறோம் என்றார். நேரா போனேன். கிட்டத்தட்ட 30 நிமிடம் நேராவே போனேன். கூட்டம் என்னை கசக்கி ஜீஸ் பிழிந்து கொண்டிருந்தது. இந்த மாதிரி சமயங்களில் தான் சூரியன் டபுள் டியுட்டி பார்க்கும். வியர்த்துக் கொட்ட ஆரம்பித்துவிட்டது.
ஒரு வழியாக லைட்டுக் கம்பத்தை அடைந்தால் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் திரண்டிருந்த அந்த பீச் கூட்டத்தில் தனி அடையாளங்களுடன் டிவிட்டர்கள் கைகாட்டினார்கள். @TBCD தான் முதலில் கை கொடுத்தார். உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டமா என்று முதலிலேயே கலாய்க்க ஆரம்பித்தவர், வானத்தில் பேட்ரோலுக்கு வந்த ஹெலிகாப்டரைப் பார்த்து, இதுல தான் நீங்க வர்றீங்களோன்னு நினைச்சோம் என்று அடுத்த பிட்டைப் போட்டார்.
30 நிமிடம் தாமதமாக வருவேன் என்று போனில் என்னுடன் லைவ் கமெண்டரி கொடுத்த @vickytamil 60நிமிடம் தாமதமாக வந்தார். நான் பீச்சுக்கு வந்துட்டேன், நீங்க எங்க இருக்கீங்க என்று விசாரித்த டாக்டர், சோன்பப்படியுடன் 20 நிமிடம் கழித்து வந்தார். அதற்குள் வெயில் தாங்காமல், நாங்கள் நிழலும் இடமும் தேடி, தமிழ் சினிமாக்களால் சரித்திரப் புகழ் பெற்றுவிட்ட, ஏதோ ஒரு பெயர் தெரியாத நினைவுச் சிதிலத்தின் கீழ் அமர்ந்தோம். உட்காரும் இடத்தில் பரவியிருந்த உடைந்திருந்த பீர் பாட்டில் துண்டுகளை எடுத்து ஒரமாகப் போடுவதற்கு 15 நமிடம் ஆகிவிட்டது.
தண்ணீர் பாட்டில் மற்றும் ஸ்ரீகிருஷணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகை, ஸ்பான்சர் செய்தது யார் என்று தெரியவில்லை. ஒரு ரவுண்டு ஸ்வீட் முடிந்து குசலம் விசாரிப்பு முடிந்தவுடன் தண்ணீர் பாட்டில்கள் காலியாகியிருந்தன. இதில் விசேஷம் என்னவென்றால், தண்ணீரை (எங்கள் அனுமதி இல்லாமல்) குடித்தது அங்கிருந்த லோக்கல் குட்டி தாதாக்கள். அவர்களுடைய பீப்பி ஊதல்கள் மற்றும் காட்டுக் கத்தல்களுக்கிடையில், நாங்கள் எதைப் பேசினோம் என்பது ஞாபகமில்லை.
ஆனால் இரண்டு மணிநேரத்தில் எழுந்து கொள்ளலாம் என்று செய்த முடிவு உற்சாகமிகுதியால் சுவாரசியமாக 4 மணி நேரம் நீண்டது. அரட்டையில் கலாநிதி, தயாநிதிக்கள், ரஜனி, விஜய், இளையராஜா, ரகுமான், கருணாநிதி, ஜெயலலிதா, வி.ஐ.பி டிவிட்டர்கள், இரண்டு அக்கவுண்ட் வைத்திருக்கும் டிவிட்டர்கள், வெறும் லிங்க் போடும் டிவிட்டர்கள், RTக்கு ஏங்கும் டிவிட்டர்கள், ஃபாலோவர்சுக்காக மெனக்கெடும் டிவிட்டர்கள் உட்பட பல பெயர்கள் ஒரு ரவுண்டு சுண்டலுடன் அரைபட்டுக் கொண்டிருந்தன. கடைசியில் இன்றைய சினிமா பிசினஸ் பற்றி நான் பேசியதை சுவாரசியமாக எல்லோரும் கேட்டார்கள்.
//—————ஞாபகத்தில் இருப்பதை எல்லாம் எழுதினால் நீண்டு கொண்டே போகும் போலிருக்கிறது. அதனால் இத்துடன் End title ——————–//
தம்பி வெற்றி ராஜ் (@v4vetri)
ட்விட்டரில் இந்த வார்த்தைகளை முதலில் போட்டுத்தான் டிபிசிடி தலைமை ஏற்று நடத்தப் போகும் ட்விட்டர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.அந்த வார்த்தைகளுக்கு அப்படி என்னதான் சக்தி இருந்தது என தெரியவில்லை.
ஒருகாலத்தில் ‘வைகோ அழைக்கிறார்’,'இயேசு அழைக்கிறார்’ போன்ற வார்த்தைகள் நிகழ்த்திய மாயாஜாலத்தை மேலே சொன்ன அந்த வார்த்தைகளும் நிகழ்த்த தவறவில்லை.ஆம்..பெசன்ட் நகரில் கூட்டம் என அறிவித்ததுதான் தாமதம்.நகரெங்கும் பெசன்ட் நகர் செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிய துவங்கி விட்டன.ஓரிரு நூறு இடங்களில் சிறப்பு பேருந்து விட சொல்லி பொதுமக்கள் மறியலில் கூட ஈடுபட்டதாக செய்தி வந்தது.’எல்லா சாலைகளும் ரோமாபுரி நோக்கி’ என்பதை போல் அன்றைய தினம் எல்லா பேருந்துகளும் ‘பெசன்ட் நகர்’ போர்டு போட்டு ஓடிக் கொண்டிருந்தன.
எவ்வளவு கூட்டம் என்றால் விழா அமைப்பாளர்களாகிய நாங்களே உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பயங்கர கூட்டம்.அங்கு வந்த மக்கள் கூட்டம் இடம் கிடைக்காமல் சர்ச்சுக்குள் நின்று கொண்டு எங்கள் பேச்சை கேட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அலைகடலென கூட்டம் என்ற உவமையை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அலையும் கடலும் மட்டுமே பங்குபெற்ற கூட்டம் இதுவாகத்தான் இருக்கும்.இது போதாதென்று அன்று நடந்த சென்னை மாரத்தானில் கலந்து கொண்ட வீரர்கள் டிபிசிடி வருவதைக் கேள்விப்பட்டு டெஸ்டிநேஷன் நோக்கி ஓடாமல் நேராக பெசன்ட் நகர் வந்து விட்டனர்.
இதை அறிந்த தமிழக அரசு சும்மா இருக்குமா? தன்னுடைய உளவுத்துறையை அனுப்பி கூட்டத்துக்கு வரும் கூட்டத்தை அறிய சொன்னதால் அவர்களும் ரோந்து என்ற பெயரில் ஹெலிகாப்டரில் வந்து அவ்வப்போது நோட்டம் விட்டு செல்லும் பணியை செவ்வனே செய்தனர்.
என்னதான் டிபிசிடி நல்ல மனிதராக இருந்தாலும் அவரை பிடிக்காத தீய சக்திகள் இருக்கத்தானே செய்யும்.அவர்கள் இந்த கூட்டத்தைக் கலைக்க ஏற்பாடு செய்த நபர்கள் கர்ம சிரத்தையோடு சில வேலைகளில் ஈடுபட்டனர்.என்ன தெரியுமா? நாங்கள் குழுமியிருந்த இடத்துக்கு வந்து கூச்சலிட்டும் சில வாத்தியங்களை இசைத்தும் பாட்டு என்ற பெயரில் ஊளையிட்டும் பார்த்தனர்.ஊஹூம்..நாங்கள் அசையவே இல்லை.
இதனை எல்லாம் தாண்டிதான் இந்த கூட்டம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.கூட்டத்துக்கு வந்த மக்கள் முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தது.இனிமேல் நாம் காலரை தூக்கி சொல்லி கொள்ளலாம்.
‘ 2011 நம்ம கையில ‘
‘அண்ணன் டிபிசிடி தான் அடுத்த முதல்வர்’
தானாகவே குழியில் சே ட்விட்டபுக்கு வந்து மாட்டிக்கொண்ட முரளி ஜெயராமன் (@jmr_chn)
My first tweetup. Great opportunity to see the (real) faces behind the fancy names. Thoroughly enjoyed the time spent.
சினிமா, அரசியல், இலக்கியம் – இவற்றை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கும் வல்லுனர்களைப்பார்க்க ஒரு சந்தர்ப்பம்.
வாய்ப்பை தந்த TBCD அவர்களுக்கும், இதை ஏற்பாடு செய்த உங்களுக்கும் மிக்க நன்றி.
தம்பி வெங்கி என்கிற வெங்கடேஷ் குமாரவேல் (@venkiraja)
ட்விட்டரைப் போலவே 140 கேரக்டரில் பேசிய அன்பர்கள் ஆதரவளித்திருந்தால் CWG ரேஞ்சுக்கு பப்ளிக்யுட்டி பண்ணியிருக்கலாம்!
![]()
கலகலப்பு மட்டும் இருந்து கைகலப்பாகாத வரைக்கும் இந்த ட்வீட்டப்பு மட்டுமல்ல இனிவரும் எல்லா ட்வீட்டப்புமே இனிய ஆப்பமாய் இருக்கும்!
![]()
wat to say? i felt almost like a blogmeet..
But new faces.. Enjoyed..
![]()
But shud say this..twitters are more informative than bloggers
நண்பர் விக்கி (@vickytamil)
Chennai tweetup இனிதே முடிவடைந்தது.
(வழக்கம்போல்) கொஞ்சம் சுயம், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சமூகம், நிறைய்ய சினிமா பேசினோம் ..கலைந்தோம்
![]()
ஒரு 12 பேர் சேந்து தமிழ்நாட்டையே பிரிச்சி மேஞ்சாங்க. அதை நான் ஒரு 2 மணி நேரம் வெறிக்க வெறிக்க வேடிக்கை பாத்தேன்
அப்பதான் தெரிஞ்சுது என்னதான் ஆடுனாலும் தல தலைதான் வால் வால்தான்#தாறுமாறு
ஒளிஒவியம்
மக்களே..இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ட்விட்டப் புகைப்படங்கள். பெரும்பாலான படங்களை எடுத்தது நமது ஒளி ஒவியர் தம்பி வெங்கட் குமாரவேல்
தம்பி புகைபடக்கலையில் ரொம்ப திறமையானவர்..எங்கள கூட அழகாக காட்டுவார் என நானும் டிபிசிடியும் ரொம்ப நம்பினோம்..ஹூம் நினைக்கிறது எல்லாமேவா நடக்குது
தம்பி வெங்கி டயர்ட்டானபின் ஒளி ஒவியராக டேக் ஓவர் பண்ண நண்பர் கார்க்கியும் எவ்வளவோ முயற்சித்தார்..but what to do..no success
இரவில் எடுத்த படங்களின் ஒளி ஒவியர் டாக்டர் புரூனோ..வெளிச்சத்திலேயே ஒண்ணும் பண்ண முடியல..பாவம் இருட்டுல அவரும் ஃபிளாஷ் போட்டு எவ்வளவோ ட்ரை பண்ணார்..பட்ஷே..இந்த அட்டெம்ட்டும்
இப்படி மூணு பேரு வளைச்சு வளைச்சு எடுத்தும்…என்னது..ஹலோவ் அதுக்காக மறுமொழியில் சட்டி அகப்பை என்று எதுவும் சொல்லிடாதீங்க
(டயலாக் உபயம் : டிபிசிடி)
டிஸ்கி
படங்களில் இருக்கும் (மொக்கை) கமெண்டுகள் நகைச்சுவைக்காக எழுதியவை. எந்த உள்நோக்கமோ உள்குத்தோ கிடையாது.
பதிவைத்தான் எழுதுல, படங்களுக்கு கமெண்டாவது போடலாமே என்ற என் வீபரீத ஆசையின் விளைவே அந்த கமெண்டுகள் பின்னே ஒளிந்திருக்கும் ஃபிளாஷ்பேக்
![]()
பின் குறிப்பு
இந்த சந்திப்பில் எடுத்த full resolution photos with face & geo tagகோடு பார்க்க, தரவிறக்கி கொள்ள இங்கே கிளிக்கவும்..
இம்புட்டு நேரம் பொறுமையா எங்க சந்திப்பை பற்றி படித்ததற்கும், படங்களை பார்த்ததற்கும் மிக்க நன்றி! அப்படியே உங்க கருத்துகளையும், கும்மிகளையும் கொடுத்துட்டு போனீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவோம்
![]()
Related posts:
Facebook comments:











RT @ksawme: ட்விட்னவங்க சந்திப்பு!! – ஆகத்து 2010 | சுவாசிகா http://ksaw.me/2010/09/08/tweetup-aug-20...
via Twitoaster
@ksawme Good cover-up! Enjoyed it…
via Twitoaster
@orupakkam நன்றி ஸ்ரீதர்!
via Twitoaster
[...] This post was mentioned on Twitter by Swami K, Swami K and அன்பு, அன்பு. அன்பு said: RT @ksawme: ட்விட்னவங்க சந்திப்பு!! – ஆகத்து 2010 | சுவாசிகா http://j.mp/9YuYJg [...]
@ksawme அட்டகாசம் Boss .. சந்திப்பு வரலாறு, பூகோளம் etc etc வில்யே வித்தியாசமான கவரேஜ் .. நன்றிஹை
via Twitoaster
@ksawme அட்டகாசம் Boss .. சந்திப்பு வரலாறு, பூகோளம் etc etc விலேயே வித்தியாசமான கவரேஜ் .. நன்றிஹை
via Twitoaster
@VickyTamil நன்றி விக்கி சே விக்னேஷ்
via Twitoaster
@ksawme மீசையெல்லாம் எடுத்தாச்சு போல !
via Twitoaster
@thennarasu
அதை எடுத்து 2 மாசமாச்சு!
via Twitoaster
[...] This post was Twitted by JMR_CHN [...]
நன்றாக தொகுத்துள்ளீர்கள் !
போட்டோ கமெண்ட்ஸ் பயங்கர காமெடி
(ஒரு பக்கம் கடுப்பு இருந்தாலும்)
16வது போட்டோவில் இருப்பவர் விக்கி ச்சே விக்னேஷ்..வெற்றின்னு போட்டுருக்கீங்க..
பதிவில் உங்கள் கருத்தையும் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
நன்றி வெற்றி தம்பி!
//போட்டோ கமெண்ட்ஸ் பயங்கர காமெடி (ஒரு பக்கம் கடுப்பு இருந்தாலும்)//
பதிவில் கூறியதுபோல படங்களில் இருக்கும் (மொக்கை) கமெண்டுகள் நகைச்சுவைக்காக எழுதியவை. எந்த உள்நோக்கமோ உள்குத்தோ கிடையாது!!
//16வது போட்டோவில் இருப்பவர் விக்கி ச்சே விக்னேஷ்..வெற்றின்னு போட்டுருக்கீங்க.//
நன்றி தம்பி..திருந்திவிட்டேன் சே திருத்திவிட்டேன்
//பதிவில் உங்கள் கருத்தையும் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்//
நானும் எழுதனும்னு இருந்தேன்..ஆனா நான் சொல்ல வந்ததையெல்லாம் நீங்க எல்லாருமே சொல்லிடதால விட்டுட்டேன்!
அன்புடன்,
சுவாசிகா
அண்ணன் டிபிசிடியை எங்க ஆளையே காணோம்..?
தெரியல தம்பி..மெசேஜ் பண்ணிட்டேன்..பதிவை பார்த்தாரா தெரியல
சுவாசிகா உங்க குருஜிபேயோன் சார் வந்து இருப்பார்னுள்ள நினைச்சேன்.இப்படி ஏமாத்திட்டிங்களே.அவர் வீட்டுக்கு போய்
ஒரு போட்டா எடுத்தாவது இதோட சேர்த்துடுங்க.
பேயோன் சாரை கூப்பிட்டுருந்தால்
’எரிந்தரா! கலந்து கொள்ள விருப்பமில்லை கிளம்புகிறேன்’ என்றிருப்பார்
அன்புடன்,
சுவாசிகா
என்னவென்று சொல்வது..எப்படி சொல்வது..
எதிர்பார்ப்புகளை மீறி, டுவிட்டர்களின் மனம் கவரும் வண்ணம் பதிவு போட்டுட்டாரப்பா..சாமி !
படங்களுக்கு போட்ட பின்னுட்டம் அருமை ! அருமை !
நன்றி நண்பரே!!
ஏதோ என்னால முடிஞ்சது
அன்புடன்,
சுவாசிகா
RT @ksawme: ட்விட்னவங்க சந்திப்பு!! – ஆகத்து 2010 | சுவாசிகா http://ksaw.me/2010/09/08/tweetup-aug-20...
via Twitoaster
Twitter -லேயே சொல்லியாச்சி,அருமை, அந்த சந்திப்புக்கு உயிர் கொடுத்திருக்கு இந்த பதிவு, போட்டோ கமெண்ட்ஸ் சூப்பர், எல்லோரையும் நிற்க வச்சி ஒரு குரூப் போட்டோ மிஸ்ஸிங்
நன்றி நண்பா!
//எல்லோரையும் நிற்க வச்சி ஒரு குரூப் போட்டோ மிஸ்ஸிங்//
என்னையும் டிபிசிடியையும் பார்த்த பின்னுமா இப்படி ஒரு கேள்வியை கேட்டிங்க?
உங்க ரெண்டு போரையும் தனி தனியா ஒரு குரூப் போட்டோவும் , மத்தவங்களை எல்லாம் சேர்த்து ஒரு குரூப் போட்டோ எடுத்திருக்கலாமே
உங்க முத இரண்டு ஆசையை ஏற்கனவே நிறைவேத்தியாச்சு!
உங்க கடைசி ஆசையை (நான் குரூப் போட்டோவை சொன்னேன் !) முக்காவாசி நிறைவேற்றியாச்சு!
அடுத்த தடவை கண்டிப்பாக இரண்டு குரூப் போட்டோவையாவது பார்சல் பண்ணிறேன்
அன்புடன்,
சுவாசிகா
பதிவு நல்லாத்தான் இருக்கு. பங்கு பெற்றவர்களையே ஆளுக்கு ஒரு பாரா எழுதச் சொல்லி தொகுத்திருப்பது புத்திசாலித்தனமான டெக்னிக்.
முழுப் பதிவையும் படிக்கலன்னாலும், நாம எழுதினதையாவது படிப்போமேன்னு எல்லோரும் நினைப்பாங்க. அதை சரியா பயன்படுத்திட்டீங்க.
ஆனாலும், பதிவை வெளியிட, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டைம் எடுத்தது ஏன் என்று அடுத்த டிவிட்டப்பில் நீங்க சொல்லியாகணும். சொல்லிப்புட்டேன் (இப்போ நான் மிரட்டும் நேரம்)
நன்றி டைரக்டர்!!
//பதிவை வெளியிட, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டைம் எடுத்தது ஏன் என்று அடுத்த டிவிட்டப்பில் நீங்க சொல்லியாகணும். சொல்லிப்புட்டேன் (இப்போ நான் மிரட்டும் நேரம்)//
அடுத்த டிவிட்டப்ல சொல்லனுமா..ஹூம்..வேணா ஒண்ணு பண்ணலாம்..பேசாம அடுத்த ட்விட்டப் பதிவு போடும்போது சொல்லிறேன்..ஒகே..
#இது நான் பதுங்கும் நேரம்!
அன்புடன்,
சுவாசிகா
ஹிஹிஹி..
இப்படின்னு தெரிஞ்சிருந்தா நானும் பெருசா எழுதியிருப்பேனே.. வடை போச்சா?
நைஸ் மீட்டிங்.. வெரி நைஸ் போஸ்ட்…
நன்றி கார்க்கி!
வடை எங்கேயும் போல..இப்பவும் நீங்க கொடுத்தீங்கன்னா அப்டேட் பண்ணிட்டு இன்னொரு போஸ்டர் போட்டா போச்சு
புத்தம் புதிய காப்பி மாதிரி!
அன்புடன்,
சுவாசிகா
சூப்பர்
நன்றி டாக்டர்!
அன்புடன்,
சுவாசிகா
அருமையான பதிவு. வெற்றியின் வர்ணனை சூப்பர்! ஆனால்…
நண்பர் @TBCD என் ட்விட்டர் ஹான்டலை தப்பாக போட்டிருக்கிறார், நீங்களும் என்னுடைய CR ஐ எற்றுக்கொள்ளவில்லை. என் மீது ஏதாவது கோபமா?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், மறந்துட்டமேன்னு டென்ஷன் ஆகி பல்ல கடிச்சுக்காதீங்க. உடனே போய் கரெக்ட் பண்ணிடுங்க
பதிவ படிக்கறவங்களுக்கு தப்பான லிங்க் கொடுக்ககூடாதுல்ல…
//பங்கு பெற்றவர்களையே ஆளுக்கு ஒரு பாரா எழுதச் சொல்லி தொகுத்திருப்பது புத்திசாலித்தனமான டெக்னிக்.//
டைரக்டர் சார் கரெக்டா சொன்னார். நானும் இதை ஆமோதிக்கிறேன்.
இந்த ஐடியா வர நல்லா யோசிச்சதுனால பதிவு வர கொஞ்சம் தாமதம் ஆயிடிச்சோ?
படங்களுக்கு போட்ட கமெண்ட் அருமை.
நன்றி.
நன்றி முரளி!
யாரை கேட்டு ட்விட்டர் ஹான்டிலை மாத்தினிங்க
எனக்கு டின்னர் வாங்கிக் கொடுத்தால்தான் மாத்துவேன்
//இந்த ஐடியா வர நல்லா யோசிச்சதுனால பதிவு வர கொஞ்சம் தாமதம் ஆயிடிச்சோ?//
அடடே இந்த ஐடியா நல்லா இருக்கே..செல்வாகிட்ட இதையே யூஸ் பண்ணிக்கிறேன்
அன்புடன்,
சுவாசிகா
சீசன் 1-ஐ விட சீசன் 2 நல்லாயிருந்திருக்கு போல. சீசன் 3 நான் அடுத்த முறை சென்னை வரும்பொழுது ஏற்பாடு செய்யனும்னு இப்பவே சுவாமிகிட்ட ஒரு அப்ளிகேஷன் போட்டு வைக்கிறேன்.
அதுக்கென்ன டாக்டர், அடுத்த தடவை சென்னை வரும்போது சொல்லுங்க…நம்மாள முடிஞ்சத செய்றேன்
அன்புடன்,
சுவாசிகா
நீங்க எல்லாம் நரகத்தில் இரண்டுமணிநேரம் தலைகீழாக! தொங்கவேண்டும்
(உபயம் late சுஜாதா)
எப்படி ஒரு சந்திப்பூ….!
இந்த இனிய விழாவை என்னிடம் சொல்லியிருந்தால் வால்பையனோடு வந்திருப்பேன்.
உங்ககூட எல்லாம் டூ….அதுவும் பத்து நிமிடம்தான்.
அடிக்கடி இந்த இனிய சந்திப்புகள் தொடரட்டும்.
அடுத்த சந்திப்பை விரைவில் உருவாக்க இயற்கையை வேண்டுகிறேன்.
நன்றி.
ஈரோடு ரவி
(மின்னஞ்சல் வழியாக)
மேலும் ட்விட்டர்லேயே நிறைய தடவை போஸ்டர் ஒட்டினேன்..நீங்கள் பாக்கல போல!
கவலை வேண்டாம்..இப்ப உங்க கைப்பேசி எண்ணும் ட்விட்டர் ஹாண்டில் @kalkey இருக்கு..அடுத்த சந்திப்புக்கு உங்களையும் அன்புடன்
அழைக்கிறேன்..ஒகே
அன்புடன்,
சுவாசிகா
வாவ்! பாஸ் சூப்பர் கவரேஜ் டிவிட்டர் சந்திப்பினை விட அதை பற்றிய பதிவுவினை டாப் கியர்ல போட்டு தூக்கிட்டீங்க போல ! கலக்கல் இன்னும் நெறைய நெறைய இது போன்ற பதிவுகள் – சந்திப்புகள் நடைபெற வாழ்த்துகள்
[இதுக்கு இம்புட்டு நாள் எடுத்துகிட்டதுக்கு தப்பே இல்லை பாஸ் - நீங்க நல்லவரு நாங்கதான் ஓவரா கலாய்ச்ச்சுப்புட்டோம் ]
நன்றி ஆயில்யன்!
//[இதுக்கு இம்புட்டு நாள் எடுத்துகிட்டதுக்கு தப்பே இல்லை பாஸ் - நீங்க நல்லவரு நாங்கதான் ஓவரா கலாய்ச்ச்சுப்புட்டோம் ]//
அட! இதை கூட கோபமா இருக்கிற செல்வாகிட்ட சொல்ற நல்லா சாக்கா சே பதிலா இருக்கே
ஆமா..இந்த கமெண்ட்ல உள்குத்து ஏதுவும் இல்லைலே
அன்புடன்,
சுவாசிகா
மிக அருமை தல !
தொகுப்பு சூப்பர் !
நன்றி தம்பி!
அன்புடன்,
சுவாசிகா
சந்திப்பில் கலந்து கொண்டவர்களைப் பார்க்கும்போதே முடியாமல் போனது வருத்தமாய் இருக்கிறது. பதிவை படித்தால் ஹும்.
படிக்க அட்டகாசமாக இருந்தது. அடுத்த வாட்டி கண்டிப்பாக வாரன்ட் பிறப்பிக்கவும்.
ட்விட்டர் அவதாரம் : @ikarthik_
நன்றி கார்த்திக்!
அடுத்த சந்திப்புக்கு உங்களையும் அன்புடன்
அழைக்கிறேன்!
அன்புடன்,
சுவாசிகா