search
top

பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்

பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்

சின்ன வயசு ஸ்கூல் போட்டோ பார்த்துக் கொண்டிருக்கும்போது என் மனம் பள்ளிக் காலங்களுக்கு பயணப்பட்டது

அப்பொழுது முதலில் நினைவிற்கு வந்தது முதலாம் வகுப்பில் நாங்கள் பாடிய ’பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்’ பாட்டு..

இதை அநேகமாக நீங்களும் உங்கள் பள்ளி நாட்களில் கேட்டிருக்கலாம்  அல்லது பாடியே இருக்கலாம்..இந்த பாட்டு இன்னும் என் நினைவில் இருந்தது உலக அதிசியத்தில் ஒன்று(எனக்கு ;) )

இந்தப் பாட்டைப் பாட நான் ரெடி..என்கூட பாட நீங்க ரெடியா ;-)

பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்

என்ன ஜாம் – கோ ஜாம்

என்ன கோ – டீ கோ

என்ன டீ – ரொட்டி

என்ன ரொட்டி – பன் ரொட்டி

என்ன பன் – ரிப்பன்

என்ன ரிப்பன் – பச்சை ரிப்பன்

என்ன பச்சை – மா பச்சை

என்ன மா – டீச்ச்ரம்மா

என்ன டீச்சர் – கணக்கு டீச்சர்

என்ன கணக்கு – வீட்டுக் கணக்கு

என்ன வீடு – மாடி வீடு

என்ன மாடி – மொட்டை மாடி

என்ன மொட்டை – பழனி மொட்டை

என்ன பழனி – வடபழனி

என்ன வடை – ஆமை வடை

என்ன ஆமை – திரியாமை

என்ன திரி – விளக்கு திரி

என்ன விளக்கு – குத்து விளக்கு

என்ன குத்து – ஆங் கும்மாங் குத்து

பிஸ்கட் நல்லா இருந்ததா :) அட சும்மா சொல்லுங்க..

தொடர்ந்து பேசுவோம்

சுவாசிகா

Related posts:

  1. தேடிடு தமிழா!!!

Facebook comments:

8 Responses to “பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்”

  1. tamilwoven tamilwoven says:

    @ksawme அப்படியே @ravisuga க்கு அனுப்பிடுங்க.
    via Twitoaster

  2. Senu... says:

    for me this is the first time i am reading this.. though it is kiddish… yes i like it very much…nice one mate.. keep trying more differently… let me strenghten my tamil reading skills by reading your’s…..
    apologies… i wrongly voted with a single star.. ofcourse it deserves 4 starts….
    rgds
    Senu..

    • சுவாசிகா says:

      Thanks mate :)

      //let me strenghten my tamil reading skills by reading your’s//
      அடப்பாவமே…சரி ஆல் தி பெஸ்ட் ;)

      // i wrongly voted with a single star.. ofcourse it deserves 4 starts//
      ஈட்ஸ் ஒகே நண்பா..வோட்டு போட மனசு இருந்ததே..அதுவே போதும்

      அன்புடன்,
      சுவாசிகா

  3. [...] This post was mentioned on Twitter by Swami K, Swami K. Swami K said: பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்!! | சுவாசிகா http://bit.ly/7Re4iY [...]

  4. அரவிந்தன் says:

    என்ன பச்சை..

    மா பச்சை

    என்ன மா

    ம்

    மா…

    • சுவாசிகா says:

      ஓ அப்படி ஒரு version இருக்கா?! அம்மாவில இருந்து எப்படி போகும்?!

      அன்புடன்,
      சுவாசிகா

  5. அரவிந்தன் says:

    அம்மா வுக்கு அப்புறம் எதுவும் இல்ல.நாங்க சா-பூ-திரிக்கு பதிலாக இந்த பாடலை பயன்படுத்துவோம்

    • சுவாசிகா says:

      ஓ..அப்படியா..இண்ட்ரெஸ்டிங்..

      நாங்க யூஷுவலா இங்கி..பிங்கி..பாங்கிதான் :)

      அன்புடன்,
      சுவாசிகா

Leave a Reply

top

Switch to our mobile site